எசாயா (ஏசாயா) 57:15-19
57:15 உயர்ந்தவரும் உன்னதரும் காலம் கடந்து வாழ்பவரும், ‘தூயவர்’ என்ற பெயரைக் கொண்டவரும் கூறுவது இதுவே: உயர்ந்த தூய இடத்தில் நான் உறைகின்றேன்; நொறுங்கிய, நலிந்த நெஞ்சத்தினரோடும் நான் வாழ்கின்றேன்; நொறுங்கிய உள்ளத்தினரை ஊக்குவிக்கவும் நலிந்த நெஞ்சத்தினரைத் திடப்படுத்தவும் நான் குடியிருக்கின்றேன்.
57:16 ஏனெனில், என்றென்றும் நான் குற்றஞ்சாட்டமாட்டேன்; எப்பொழுதும் சினம் கொண்டிருக்கமாட்டேன்; ஏனெனில், நான் தோற்றுவித்த உயிர் மூச்சாகிய மனித ஆவி என் திருமுன் தளர்ச்சியடைந்து விடும்.
57:17 பேராசை என்னும் தீமையை முன்னிட்டு நான் இஸ்ரயேல் மீது சினமடைந்து, அவனை அடித்து நொறுக்கினேன்; சீற்றம் கொண்டு என்னை அவனுக்கு மறைத்துக் கொண்டேன்; அவனோ என்னைவிட்டு விலகி மனம்போன போக்கிலே சென்றான்.
57:18 அவன் சென்ற பாதைகளைக் கண்டேன்; ஆயினும் அவனைக் குணமாக்குவேன்; அவனை நடத்திச் சென்று அவனுக்கு மீண்டும் ஆறுதல் அளிப்பேன்.
57:19 அவனுக்காக அழுவோரின் உதடுகளில் நன்றி ஒலி எழச்செய்வேன்; அமைதி! தொலையில் இருப்போருக்கும் அருகில் இருப்போருக்கும் அமைதி! என்கிறார் ஆண்டவர். அவர்களை நான் நலமடையச் செய்வேன், என்கிறார் ஆண்டவர்.